பாலிடெக்னிக் தேர்வு வினாத்தாளை வெள்ளைத்தாளில் எழுதி, சமூக வலைதளங்களில் வெளியிட்ட நாமக்கல் இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1,060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, கடந்த 8 முதல் 12ம் தேதி வரை தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில், ஆங்கிலம் பாடப்பிரிவு தேர்வுக்கான வினாத்தாள் 'லீக்' ஆனதாக கூறி, ஒரு வெள்ளை தாளில் எழுதப்பட்டு, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விசாரணையில், நாமக்கல்லைச் சேர்ந்த பூர்ணிமாதேவி, 27 என்ற பெண் தேர்வர், தேர்வு முடிந்த பின், வினாக்களை வெள்ளை தாளில் எழுதி, தேர்வு விதிமுறைகளை மீறி, அதை வெளியே எடுத்து வந்து, சமூக வலைதளங்களில் பரப்பியது தெரிந்தது.
இதையடுத்து, அவர் வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத தடை விதித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டது.இதற்கிடையே, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில், பூர்ணிமா தேவி செயல்பட்டதாக, அவர் மீது, நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து, பூர்ணிமாதேவியை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...