குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் 2026: அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் & அவசர உதவி எண்கள் காட்சிப்படுத்தப் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!
செய்திச் சுருக்கம்: குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும், முக்கிய அவசர உதவி எண்களைப் பள்ளி வளாகத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்தவும் பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் பூ. ஆ. நரேஷ் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய வழிகாட்டுதல்கள்: பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (க. எண். 060773/எம்2/இ1/2026, நாள்: 17.11.2026) மற்றும் அரசாணை (1D) எண்: 83 (நாள்: 17.06.2021) ஆகியவற்றின் படி, குழந்தைகளின் பாதுகாப்பு, நலன் மற்றும் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் (CEOs) அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன:
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: அனைத்துப் பள்ளிகளிலும் போக்சோ (POCSO) சட்டம், இணையவழிப் பாதுகாப்பு (Cyber Safety), மனநலன் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
மாணவர் பங்கேற்பு: விழிப்புணர்வுப் போட்டிகள், கலந்துரையாடல்கள் மற்றும் உறுதிமொழி ஏற்பு ஆகியவற்றில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பதை ஊக்குவிக்க வேண்டும்.
அறிவிப்புப் பலகை பராமரிப்பு: பள்ளி அறிவிப்புப் பலகைகளை முறையாகப் பராமரித்து, கீழ்க்கண்ட உதவி எண்கள் மாணவர்களுக்குத் தெளிவாகவும் படிக்கக்கூடிய வகையிலும் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிகளில் காட்சிப்படுத்த வேண்டிய முக்கிய உதவி எண்கள்:
| உதவி எண் பிரிவு | தொலைபேசி எண் / செயலி | பயன்பாடு |
| குழந்தைகள் உதவி எண் (Child Helpline) | 1098 | பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கான உதவி எண். |
| போக்சோ / குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் | 14417 | குழந்தைகளுக்கு எதிரான பாலியல், உடல் ரீதியான மற்றும் வாய்மொழித் துன்புறுத்தல்கள் குறித்துப் புகார் அளிக்க. |
| மாணவர்கள் மனநலன் ஆலோசனை மையம் | 14416 | மாணவ, மாணவியரின் மனநலன் சார்ந்த ஆலோசனைகளைப் பெற. |
| இணையவழிக் குற்றத் தடுப்பு உதவி எண் | 1930 | இணையவழி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்துப் புகார் அளிக்க. |
| போதை இல்லா தமிழ்நாடு உதவி எண் | 10581 | பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு குறித்துப் புகார் அளிக்க. |
| Drug Free Tamil Nadu செயலி | Google Play Store | போதைப் பொருட்கள் குறித்துப் பெயர் குறிப்பிடாமல் (Anonymous) புகார் அளிக்க. |















0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...