
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2027 - வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு (DLOs) உரிய அறிவுரை - கரூர் மாவட்ட ஆட்சியரின் கடிதம்
அனுப்புநர்:
திரு.ச.பிரசன்னா ராமசாமி இ.ஆ.ப
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர். கரூர்.
பெறுநர்:
1 மண்டல இணை இயக்குநர். கல்லூரி கல்வி இயக்குநரகம், திருச்சிராப்பள்ளி-620002
2 முதன்மை கல்வி அலுவலர், கரூர் மாவட்டம்.
3. மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை கல்வி), கரூர்.
மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி), கரூர், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்). கரூர்.
ந.க.எண்.அ4/15417/2026 நாள்: 19.112026
அய்யா/அம்மையீர்,
பொருள்: தேர்தல்கள் கரூர் மாவட்டம் - சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2027 01012027 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் ஆகியவை தொடர்பாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுதல்- தொடர்பாக.
பார்வை தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர். சென்னை அவர்களின் கடிதம், எண்.23500/தேர்தல்கள்-1/2026-11 நாள்.11.11.2026
பார்வையில் காணும் தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர் அவர்களின் கடிதத்தில் 01.01.2027 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்(Form6), நீக்கல்(Form7) மற்றும் திருத்தம் (Forms) ஆகியவை தொடர்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2027க்கான சிறப்பு முகாம்கள் கீழ்க்கண்ட நாட்களில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வ.எண்
நாள்.
கிழமை.
1
21.11.2026
சனிக்கிழமை
2.
22.11 2026
ஞாயிற்றுக்கிழமை
3
29.11.2026
ஞாயிற்றுக்கிழமை
எனவே சிறப்பு முகாம் நடைபெற உள்ள வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் (Designated Location Officer) முதல்வர்/துணை முதல்வர் தலைமை ஆசிரியர் /உதவி தலைமை ஆசிரியர்/ பிற ஆசிரியர்களை சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளை காலை 8.30 மணிக்கு திறந்து வைத்திடவும். வாக்குச்சாவடி மையங்களில் உரிய நேரத்தில் ஆஜரில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்படி முகாம் நடக்கும் நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாமில் வரும் மனுக்களை (படிவம் 6, 6A, 6B 7, மற்றும் 8) பெற்றும், அதன் விபரங்களை படிவம் 9, 10, 11, 11A மற்றும் 11B-ல் பூர்த்தி செய்து அறிக்கையாக சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலருக்கு(ERO) அனுப்ப வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு (DLOs) உரிய அறிவுரை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
ஒம்/ ச.பிரசன்னா ராமசாமி
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்,
//உண்மைநகல் உத்தரவுபடி//
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவருக்காக,
கரூர்.
நகல்
1 வாக்காளர் பதிவு அலுவலர், 137 குளித்தலை சட்டமன்றத் தொகுதி மற்றும்
வருவாய் கோட்டாட்சியர், குளித்தலை.
2 வாக்காளர் பதிவு அலுவலர், 135 கரூர் சட்டமன்றத் தொகுதி
மற்றும் வருவாய் கோட்டாட்சியர் கரூர்.
3. வாக்காளர் பதிவு அலுவலர், 134-அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி
மற்றும் உதவி ஆணையர்(கலால்), கரூர்
வாக்காளர் பதிவு அலுவலர், 135-கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், கரூர்.
5. உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர்,கரூர்.
6. உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வட்டாட்சியர், கரூர்/ அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்/ குளித்தலை/மண்மங்கலம்/ கடவூர்/புகழூர்.
7. உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் தனி வட்டாட்சியர்கள்(ச.பா.தி) கரூர்/அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்/ குளித்தலை/மண்மங்கலம்/கடவூர்/புகழூர்
8. உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையர், குளித்தலை







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...