ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் 14-ம் தேதி சென்னையில் உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''ஓணம் பண்டிகையை முன்னிட்டு 14-ம் தேதி புதன்கிழமை சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
உள்ளூர் விடுமுறைக்குப் பதில் அக்டோபர் 8-ம்தேதி சனிக்கிழமை சென்னை
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு
பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் உள்ளூர் விடுமுறை நாளான 14-ம்
தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள
கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு
பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...