NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 24ம் தேதி முதல் நேர்காணல், சான்று சரிபார்ப்பு தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 24ம் தேதி முதல் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்க உள்ளதாக டிஎன்பிசி அறிவித்துள்ளது*

*இதுகுறித்து தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு சார்நிலைப் பணிகளில் அடங்கிய சட்டத் துறையில் ஆட்சிமொழி (சட்டம்) பிரிவில் மொழி பெயர்ப்பு அலுவலர், மொழி பெயர்ப்பாளர். தமிழ்நாடு வனச்சார்நிலைப் பணிகளில் அடங்கிய  வனச்சரக அலுவலர். தமிழ்நாடு ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டடக்கலை உதவியாளர், திட்ட உதவியாளர்*

*தமிழ்நாடு கூட்டுறவு சார் நிலைப் பணிகளில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் மற்றும் தமிழ்நாடு அமைச்சுப் பணியில் அடங்கிய தொழில், வணிகத்துறைக்கான விலை மதிப்பீட்டு உதவியாளர்  ஆகிய பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன*

*இவற்றில், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் மற்றும் விலை மதிப்பீட்டு உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளும்,  வனச்சரக அலுவலர் பதவிக்கான முதன்மை தலைமை வனப் பாதுகாவலரால் நடத்தப்பட்ட உடற் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண்களும், கட்டடக் கலை உதவியாளர்*


*திட்ட உதவியாளர் பதவிக்கு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண்களும், ஆட்சிமொழி (சட்டம்) பிரிவில் மொழி பெயர்ப்பு அலுவலர்- மொழி பெயர்ப்பாளர் பதவிகளுக்கு நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண்களும் தேர்வாணைய இணைய தளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளன*

*இவற்றுள், வனச்சரக அலுவலர், கட்டடக்கலை உதவியாளர்-திட்ட உதவியாளர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கு சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 25.04.2019 முதல் 06.05.2019 வரையிலும், விலை மதிப்பீட்டு உதவியாளர் பதவிக்கு சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 25.04.2019 முதல் 03.05.2019 வரையிலும் தங்களது மூலச் சான்றிதழ்களை அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யலாம்*

*மொழி பெயர்ப்பு அலுவலர், மொழி பெயர்ப்பாளர் பதவிக்கு நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தேர்வு 24.04.2019 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். இவ்வாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive