NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

100% ஆசிரியர்கள் பணிக்கு வர கட்டாயப்படுத்துவதாக ஆசிரியர் கூட்டணி பள்ளிக்கல்வி ஆணையரிடம் புகார்.

கீழ்க்காணும் மிக முக்கியமான பிரச்சனைகளில் தாங்கள் உடனடியாக தங்கள் மேலான கவனத்தையும் , தலையீட்டையும் செலுத்தி அவைகளை உடன் தீர்த்து வைக்குமாறு தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.

 1 ) கொரோனாவின் கோரப்பிடிகள் தமிழகத்தை மிகக் கடுமையாக இறுக்கிக்கொண்டிருக்கும் இச்சூழலில் பள்ளிகள் திறப்பதை தமிழக அரசு தள்ளிவைத்துள்ளது . அதற்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

2 ) அதனடிப்படையில் தாங்கள் பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் பள்ளியில் மாணவச் செல்வங்களைச் சேர்த்தல் உள்ளிட்ட ஒரு சில நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக தலைமையாசிரியர் மற்றும் அவருக்குத் துணைபுரிய ஒரு சில ஆசிரியர்கள் மட்டும் தினமும் சுழற்சி அடிப்படையில் பள்ளிக்கு வந்தால் போதும் . 100 விழுக்காடு ஆசிரியர்களும் பள்ளிக்குத் தினமும் வரவேண்டிய அவசியமில்லை என்பதை தாங்கள் தங்கள் சுற்றறிக்கையின் மூலம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளீர்கள் . அதற்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

3 ) தங்களின் இந்த மிகச் சரியான ஆணையை கிருஷ்ணகிரி , தர்மபுரி , சேலம் , திருவண்ணாமலை ஆகிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மதிக்க மறுக்கிறார்கள் . உதாசீனப்படுத்தி காற்றில் பறக்க விடு கிறார்கள் . மேலும் மற்ற முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் . ஆகவே , இதில் தாங்கள் உடனடியாக தலையிட்டு சரிசெய்ய கனிவுடன் வேண்டுகிறோம்.

4 ) பட்டதாரி ஆசிரியர்களுக்கு இவ்வாண்டு வழங்கப்படவேண்டிய உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுகளையும் , முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுகளையும் வழங்கிட தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.

5 ) மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பொது மாறுதலில் ( Transfer Counseling ) கலந்துகொள்ள இயலாத நிலைமை தொடர்ந்து நீடித்து வருகிறது . இவர்கள் தங்கள் குடும்பங்களை பிரிந்து சென்னைப் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர் . மேலும் சமீபத்தில் சில ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தபோது குடும்பத்தார் கூட பார்க்க இயலாத சூழல் ஏற்பட்டது . எனவே நடைபெற உள்ள பொது மாறுதலில் அவர்களும் கலந்தாய்வில் பங்கேற்று அரசுப் பள்ளிகளுக்கு செல்ல ( அலகு விட்டு அலகு மாறி செல்ல ) வாய்ப்பு வழங்கிடுமாறு தங்களை கனிவுடன் வேண்டுகிறோம் . கள்ளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு நடத்திடவேண்டும் . அல்லது மனமொத்த மாறுதலில் செல்வதற்கான வழிவகை செய்யுமாறு வேண்டுகிறோம்.

6 ) பள்ளிகள் திறப்பதற்கு முன்பே ஆசிரியர்களுக்கான ஒளிவு மறைவற்ற பொது இடமாறுதல் கலந்தாய்வினை நடத்திடவேண்டுகிறோம். அதேபோல் கடந்த ஆட்சியில் பட்டதாரி ஆசிரியர் உபரி பணி யிடங்களை நிரவல் செய்து மாறுதலில் சென்று தொலைதூரங்களில் பணியாற்றி வருகின்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெற உள்ள மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை ( Preference ) அளித்திட வேண்டுகிறோம் . பொது மாறுதலில் கலந்துகொள்வதற்கு மூன்றாண்டு தேவை என்ற நிபந்தனையையும் அகற்றிட வேண்டுகிறோம் . அதேபோல் வட்டாரவள மையத்தில் பணியாற்றும் ( BRTE ) ஆசிரிய பயிற்றுநர்களை பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல கலந்தாய்வு நடத்திட வழிவகை செய்யவேண்டும் . 7 ) பதவி உயர்வு காரணமாக வேறு பள்ளிகளுக்கு இடமாறுதலில் சென்றவர்கள் , கலந்தாய்வு பொது இடமாறுதலில் கலந்துகொள்ள எவ்வித நிபந்தனையுமில்லாமல் வழிவகை செய்திட வேண்டுகிறோம்.

IMG_20210709_135240

IMG_20210709_135251




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive