வீடியோ கான்பரன்ஸ் முறையில் பகல் , 1:45 மணிக்கு துவங்கிய கூட் டம் , நான்கு மணி நேரம் நடந்தது . பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் , திட்ட அதிகாரி சுதன் , இயக்குநர்கள் கண்ணப்பன் , கருப்ப சாமி , உஷாராணி , ராமேஸ் வர முருகன் , பழனிசாமி மற்றும் இணை இயக்குநர்கள் , சென்னையில் உள்ள டி.பி.ஐ. , வளாகத் தில் , அமைச்சருடன் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பள்ளி கல்வி முதன்மை செயலர் உஷா , தலைமை செயலகத்தில் இருந்து கூட்டத்தில் பங்கேற்றார் . ' கொரோனா சூழலை கருத்தில் கொண்டு , மாணவர்களுக்கு , ஆன்லைன் மற்றும் கல்வி , ' டிவி வழியே பாடங்களை நடத்துவதில் , முழு கவனம் செலுத்த வேண்டும்.
அரசு பள்ளிகளில் , மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என , அமைச்சர் மகேஷ் கேட்டுக் கொண்டார். நிர்வாக பணிகளை , எமிஸ் ' என்ற டிஜிட்டல் தளம் வழியே மட்டுமே மேற்கொள்ள வேண்டும். நிதி பரிவர்த்தனைகளை , நிதித்துறையின் மேலாண்மை தளம் வழியே மேற்கொள்ள வேண்டும். இனி நேரடியான நிதி பரிவர்த்தனைகள் கூடாது. நிர்வாக பணிகளில் , எந்த சிக்கலும் இல்லாமல் , அரசின் உத்தரவுக்கு ஏற்ப சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் ' என , சி.இ.ஓ.க்களுக்கு உத்தரவிடப்பட்டது.
மாணவர்களின் வாழ்க்கை மொபைலால் வீணாக போகிறது ஆபாச இணையதளங்களில் முழுநேரமாக இருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் வீணாக போகிறார்கள் தயவு செய்து பள்ளி கல்லூரிகளை திறந்து மாணவர்களின் வாழ்க்கையை காப்பாற்றுங்கள் இல்லை என்றால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் படித்து முடிக்கும் இளைஞர்களுக்கு இளம் பெண்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் போய்விடும் அந்த அளவிற்கு ஆண்மை குறைவு பென்மை குறைவு அதிகரிக்கப் போகிறது
ReplyDelete