NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இந்த ஆண்டு முதலே அதிரடி மாற்றம்!


2021-22ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகள், தேர்வுகள், 2 கட்டங்களாக நடைபெறும்! 

முதல் பருவத்தேர்வுகள் நவம்பர், டிசம்பர், 2ம் பருவ தேர்வுகள் மார்ச், ஏப்ரலில் நடைபெறும். 

முதல் பருவத் தேர்வு 90 நிமிடங்கள், 2ம் பருவத் தேர்வு 2 மணி நேரம் நடைபெறும்.


மேலும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் குறைக்கப்பட்ட பாடதிட்டம் வெளியிடப்படும் எனவும் சிபிஎஸ்சி வாரியம் அறிவிப்பு
 
 
 கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 2020 - 21 கல்வியாண்டில் பெரும்பாலான நாட்கள் மாணவர்களுக்கு பள்ளி பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடந்தது. அதே நேரத்தில் இரண்டாவது அலையின் தாக்கத்தினால் சிபிஎஸ்இ உட்பட பெரும்பாலான மாநிலங்களில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளின் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் 2021 - 22 கல்வியாண்டில் இரண்டு பருவங்களாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக பிரத்யேக திட்டத்தை சிபிஎஸ்இ ம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி இரண்டு பருவங்களாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. நவம்பர் - டிசம்பரில் முதல் பருவமும், மார்ச் - ஏப்ரலில் இரண்டாவது பருவத் தேர்வும் நடத்தப்பட உள்ளது. பாடத்திட்டத்தை இரண்டு பருவங்களுக்கு 50 - 50 சதவிகிதமாக பிரித்து வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பொதுத்தேர்வை நடத்துவதற்கான சாத்தியத்தை உறுதிப்படுத்தவே இந்த ஏற்பாடு என்று சொல்லப்படுகிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive