Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET- பட்டியலை வெளியிடாமல் டி.ஆர்.பி குழப்பம் - தினமலர்


         11 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் பணியை, ஒரு வாரத்திற்கு முன்பே, டி.ஆர்.பி., முடித்து விட்டது.இதுகுறித்து, இரு வாரங்களுக்கு முன், நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர், 'ஜூலை, 30ம் தேதி, புதிய ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்' என்றார். பின், ஏற்கனவே அறிவித்த தேதி அல்லது ஓரிரு நாள், தள்ளிப் போகலாம் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

தவம்:
             டி.ஆர்.பி.,யின், இந்த தொடர் அறிவிப்புகளால், தேர்வெழுதியவர்கள் மத்தியில், பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. 'நாம் தேர்வு பெறுவோமா?' என, ஒவ்வொருவரும், பட்டியல் வெளியாகும், www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தை பார்த்தபடி காத்திருக்கின்றனர். இந்நிலையில், 'ஆக., 1ம் தேதி, பட்டியல் வெளியாகும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் உறுதியாக தெரிவித்தது. இதனால், நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை, கம்ப்யூட்டர் முன், தேர்வர்கள் தவம் இருந்தனர்.ஆனால், கடைசிவரை பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை. டி.ஆர்.பி.,யின், இந்த சொதப்பல் காரணமாக, தேர்வர்கள் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
எதிர்பார்ப்பு: 
             பட்டியல் வெளியாகாதது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:பட்டியலை, தயாரித்து முடித்துவிட்டோம். கடைசி நேரத்தில், 'மேனுவலாக' தேர்வு பட்டியலை சரிபார்க்க முடிவு செய்தோம். அதன்படி, ஒவ்வொரு பாட தேர்வு பட்டியலையும், ஒவ்வொரு அதிகாரிகள் சரிபார்த்தனர். பட்டியல் வெளியாகும் தேதி தள்ளிப்போனதற்கு, இது தான் காரணம்.மேலும், முடிவை வெளியிடுவதற்கு, தமிழக அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. 4ம் தேதிக்குள் (நாளை), அரசின் அனுமதி கிடைத்துவிடும் என, எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்ததும், உடனடியாக தேர்வு பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.




14 Comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Vattaram Vattaram Vattaram

    ReplyDelete
  3. ஒரே குழப்பம்

    ReplyDelete
  4. Ram Anna...

    Very happy friendship day!! U r not just friend for me, u r beyond that!!!! Anyways I take this opportunity to thank u for ur unconditional care towards me rit from 'super senior' issue!!! Thanks Anna!!! Convey my wishes to anni too :-) :-)

    ReplyDelete
  5. Dharshini mam, Agnes Deepa mam.. Very happy Friendship day!!!!

    Yathav brother..

    Very happy Friendship day to u!!!!

    ReplyDelete
    Replies
    1. Thank U Anonymous Sister.. Wish U The Same , This one is My Special Wishes to U...

      Delete
    2. Thanks a lot, yathav brother!!

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. வாழ்வோ சாவோ ? அறிவித்துவிடவேண்டியதுதானே ! நூலிழையில் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தக் கடைசி நம்பிக்கையையும் அறுத்து எறிந்துவிட வேண்டியதுதானே ! மரணத்தேதியை ஒருநாள் இரண்டுநாள் என இழுத்தடித்துக் கொண்டிருப்பது வேதனைதானே. முடிவு இதுதான் என்று தெரிந்து விட்டால் அவரவர் அடுத்து ஆக வேண்டிய வேலையைப் பார்ப்பார்களே. எவ்வளவு நாள்தான் மன உளைச்சலில் தவித்துக்கொண்டிருப்பது. ஆசிரியர் தேர்வு வாரியமே, எங்களை சிறுகச்சிறுக அணுஅணுவாக சாகடிப்பதை விட தயவுசெய்து தேர்வுமுடிவை விரைவில் அறிவித்து ஒரேயடியாக சாகடித்துவிடு

    ReplyDelete
    Replies
    1. True true al tet pas member feel same nanpare

      Delete
  8. இதுவும் கடந்து போகும்
    என்பதை விட..
    இதுவும் பழகி போகும்
    என்பதே.,
    பல சமயங்களில்
    நம் வாழ்க்கைக்கு
    பொருந்துகிறது...!

    ReplyDelete
  9. manitha unarvukalukku konjamavathu mathippu kodungal.......>.TRB

    THIS IS OUR HUMBLE REQUEST......
    from 72000 tet candites and their family

    ReplyDelete
  10. 500 ஆசிரியர்பயிற்றுநர்களை வருடந்தோறும் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியராக அனுப்புவது வழக்கம் சென்ற ஆண்டு ஆசிரியர்பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்பாமல் சூப்பர்வைசர்கள் அனுப்பபட்டார் இந்த வருடம் 2006 batch brte பள்ளிக்கு அனுப்பிவிட்டு Tet ல் தேர்வானவர்களை பணிநியமனம் வேண்டி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

    ReplyDelete
  11. வரும் என்ற நம்பிக்கையுடன்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive