Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Sunday Special - செட்டிநாடு மீன் வறுவல்


மிளகாய்த்தூள் - 4  தேக்கரண்டி

தனியாத்தூள் - 5  தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1  தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - 1
மிளகு - 2  தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
கடுகு - 1  தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 3  தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2  கொத்து
எண்ணெய் - 1 1 /2 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை 
* மீனை சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம்பழச்சாறைப் பிழிந்து பேஸ்ட் போல செய்து கொண்டு, அதில் மீனை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 1  மணி நேரமாவது ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊற வைத்தால் நன்றாக இருக்கும். 
 
மிளகு, காய்ந்த மிளகாய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை வாணலியில் தீயாமல் வறுத்து, ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும்.
* ஊற வைத்துள்ள மீனை இந்த அரைத்து வைத்துள்ள மசாலாவில் இரண்டு புறமும் பிரட்டி எடுத்து அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொரித்தெடுக்கவும். 
* அடுப்பின் தணலைக் குறைவாகப் பயன்படுத்தினால் மசாலா நன்கு சேர்ந்து, மொறு மொறு, மீன் வறுவல் கிடைக்கும். 
* இந்த முறையில் தயாரிக்கப்படும் மீன் வறுவல் சாம்பார் சாதம், குருமா, தனியாக சாப்பிடவும் சுவையாக இருக்கும்.




Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive