ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின்கீழ்
2021-22 - ஆம் ஆண்டிற்கான 6-19 வயதுடைய பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள்
மற்றும் மாற்றுத் திறனுடைய குழந்தைகளைக் கண்டறியும் கணக்கெடுப்பு பணி
10.08.2021 முதல் நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்பு பணிக்கு ஒவ்வொரு
மாவட்டத்திற்கும் EMIS common pool- ல் உள்ள மாணாக்கர்களின் விவரங்களை
நேரடியாக ஆய்வு செய்யவும் , வீட்டு வாரியான கணக்கெடுப்பு நடத்தி பள்ளியில்
சேராத குழந்தைகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை
கண்டறிந்து பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
31.08.2021
- க்குள் இக்கணக்கெடுப்பு பணியினை நடத்தி முடிக்க இயலாததால் அனைத்து
வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி இக்கணக்கெடுப்பு பணியினை
20.09.2021 அன்று வரை தொடர்ந்து நடத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் ,
தற்பொழுது 9 - ம் வகுப்பு முதல் 12 - ம் வகுப்பு வரை 01.09.2021 அன்று
பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் மாணாக்கர்கள் யாரேனும் பள்ளிக்கு வருகை
புரியாமல் இருந்தால் , அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை
மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு
அறிவுறுத்தப்படுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...