தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல்
காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று
குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்று
முதல்வர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணியாளர்கள் மூலமாக பள்ளி வகுப்பறை, பள்ளி வளாகம், கழிப்பறையை சுத்தம் செய்யும் பணியில் நடைபெற்று வருகிறது. பள்ளி வகுப்பறை முழுவதுமாக தண்ணீர் மூலம் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தும் மும்முரமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இது தவிர பள்ளி பதிவேடுகள் பராமரிப்பு உள்ளிட்ட பராமரிப்பு பணிகளும் நடைபெற்ற வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...