கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நம் இந்திய நாட்டில் கடந்த 18 மாதங்களாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது கொரோனா நோய் பரவல் குறைந்து வரும் காரணத்தினால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல், ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரிகளையும் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து மீண்டும் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.
அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா நோய் பரவல் தீவிரமடைந்து வருவதையடுத்து, பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்கலாமா என்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
சற்று முன் வெளியான தகவலின்படி, இந்த ஆலோசனை கூட்டத்தில் அண்டை மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள காரணத்தினால், பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்கலாமா? அல்லது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அறிவித்த தேதியில் திறக்கலாமா? என்று ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், இன்று மாலை அரசு தரப்பில் இதுகுறித்து முக்கிய சுற்றறிக்கை ஒன்று வெளியாகலாம் என்றும் அந்த தகவல் தெரிவிக்கின்றது.
தற்போது உள்ள நிலையில் மாணவ மாணவிகள் விருப்பமுள்ளவர்கள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நேரில் சென்று அல்லது கொரோனா குறித்து அச்சம் உள்ளவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலமாக கற்பது தான் சிறந்தது.
ReplyDelete