நாட்டில் கொரோன வைரசின் 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வரும் சூழலில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறந்துள்ளன. மீதமுள்ள மாநிலங்களும் பள்ளிகளை திறக்க ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்திலும் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதிமுதல் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், "கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மாநிலங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், ஆசிரியர் தினமான செப்.5-க்குள் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூடுதலாக 2 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்றும் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...