நெல்லையை சேர்ந்த அப்துல்
வகாபுதீன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு: செப்.1ம்
தேதி (நாளை) முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளி, கல்லூரிகளை
திறக்க தமிழக அரசு முடிவு செய்து ஆணை பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பூசியை
18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு செலுத்துவது தொடர்பாக இதுவரை தெளிவான
முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் இரு தவணை தடுப்பூசிகளும்
செலுத்தப்படாமல் மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது கொரோனா
நோய்த்தொற்று பரவலை அதிகரிக்க செய்ய வாய்ப்புள்ளது.
ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆன்லைன் வழியாக பயில்வதற்கு மாணவர்களும், பயிற்றுவிப்பதற்கு ஆசிரியர்களும் நன்றாக பழகி விட்ட சூழலில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற முடிவு ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை நெருங்கியுள்ளதை கருத்தில் கொண்டு, நேரடியாக அல்லாமல், ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் வகுப்புகளை கவனிக்க அனுமதிக்கும் வகையில் வழிகாட்டல்களை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...