அரசு உதவி பெறும் / சுயநிதிப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவு தொடங்க சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரே அனுமதி வழங்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.
பள்ளிக் கல்வி துறையின் கீழ் செயல்படும் சுயநிதி / நிதியுதவி / பகுதி நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்புகளில் ஆங்கில வழிப் பாடப்பிரிவு துவங்க அனுமதி கோரும் கருத்துருக்கள் , சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் , சார்ந்த பள்ளியை பார்வையிட்டு , அதன்படி கருத்துருக்கள் பரிந்துரையுடன் பெறப்பட்டு , அரசாணைகளின்படி பரிசீலிக்கப்பட்டு , உரிய அனுமதி இவ்வியக்ககத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
அரசாணையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சில அதிகார பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி , இனிவரும் காலங்களில் தங்கள் மாவட்டத்தில் செயல்படும் சுயநிதி / நிதியுதவி / பகுதி நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்புகளில் ஆங்கிலவழிப் பாடப்பிரிவு துவங்க அனுமதி கோரும் கோப்பின் தன்மையை கருதி இக்கருத்துருக்களை பார்வை -1 & 3 - ல் காணும் அரசாணைகளில் தெரிவித்துள்ள அனைத்து நிபந்தனைகளும் முழு அளவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை நன்கு பரிசீலித்து , ஆங்கில வழிப்பிரிவு துவக்க அனுமதியினை தங்கள் நிலையில் வழங்கிக்கொள்ளலாம் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.
- English Medium School Opening Power Delegate to CEO - Download Here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...