Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்களின் மருத்துவ பரிசோதனை தரவுகளை EMIS Mobile App மூலம் பதிவேற்றம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களின் உடல் நலம் , மனம் நலம் காக்க பொது சுகாதாரத் துறையின் RBSK திட்டத்தின் வாயிலாக மருத்துவக் குழுவினால் , அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பரிசோதனை சார்ந்த விவரங்களை தமிழ்நாடு பள்ளி சிறார் உடல் நல குறிப்பேடு அட்டையில் ( Tamil Nadu School Health Card ) பதிவு செய்யப்பட்டு தக்க மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவ பரிசோதனைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கிட ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியரை EMIS தளத்தில் நியமனம் செய்திட அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தற்போது மருத்துவக் குறிப்பு அட்டையில் நேரடியாக பதிவு செய்யப்படும் முறையிலிருந்து EMIS தளத்தை அடிப்படையாகக் கொண்டு திறன் பேசியில் இயங்கும் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. இதனை ஆசிரியர்கள் , மருத்துவர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் அனைத்து என அங்கத்தினர்களும் பயன்படுத்திக் கொள்ளும்படி , வடிவமைக்கப்படுகிறது , எனவே இச்செயலியில் அவ்வப்போது EMIS தளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தவறாது தகவல்களை அளித்து பள்ளி சுகாதார திட்டம் சிறப்பாக செயல்படவும் , அதன் பயனை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் எளிதில் பயன்பெறும் வாய்ப்பினை ஏற்படுத்திடுமாறு , அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
IMG_20210827_181045

IMG_20210827_181052

IMG_20210827_181100




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive