NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News : 9 முதல் 12 வகுப்புகள், கல்லூரிகள் செப். 1 முதல் நேரடி வகுப்பு நடத்தப்படும் , 1 முதல் 8ஆம் வகுப்பு வரை செப். 15 பிறகு திறக்க ஆலோசனை - தமிழக அரசு அறிவிப்பு.

 .com/img/a/

 கூடுதல் தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

செப்டம்பர் 1 ந் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு.

1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு 15 ந் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்று அறிவிக்கப்படும்.

கூடுதல் விபரம் :

முன்பே அறிவித்தவாறு , இன்று நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன :

1-9-2021 முதல் பள்ளிகளில் 9 , 10 , 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் , நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி , செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். 

மேற்படி உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில் , மழலையர் வகுப்புகள் , 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15-9-2021 - க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் மேலும் , ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் பின்வரும் செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன அனைத்து கல்லூரிகளும் 01.09.2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் . இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள் . கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் .

 • அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் ( Diploma Courses , Polytechnic Colleges ) சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும் . ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive