இன்று நடைபெற உள்ள எண்ணும் எழுத்தும் online பயிற்சி குறித்த முழு விவரம் :

.com/img/a/

  அனைவருக்கும் வணக்கம்.

9.12.2021 இன்று நடைபெற உள்ள எண்ணும் எழுத்தும் online பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள்.

அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள். ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் பள்ளியில் இருப்பின் அந்த ஆசிரியர் பள்ளி நேரம் முடிந்த பிறகு அருகாமையிலுள்ள உயர் /மேல்நிலை பள்ளியில் மட்டுமே இந்த பயிற்சி பெற முடியும். இரண்டு ஆசிரியர்களோ அல்லது அதற்கும் மேற்பட்டோர் ஒரு பள்ளியில் இருப்பின் தங்களுக்குள் இரு பிரிவாகப் பிரித்துக் கொண்டு முதல் பிரிவினர் அருகாமையில் உள்ள பள்ளியில் தேர்வினை முடித்து விட்டு பள்ளிக்கு மீண்டும் சென்றவுடன் மற்ற ஆசிரியர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பள்ளியில் அந்த தேர்வினை முடிக்க வேண்டும். நேரம் காலை 9 மணி முதல் 5 மணி வரை.

கால அளவு 30 நிமிடங்கள் மட்டும் வழங்கப்படும். 

30 வினாக்கள் கணினி திரையில் தோன்றும். ஒருவேளை விரைவாக பதிலளித்து முடித்து விட்டால், அந்த ஆசிரியர், தன்னுடைய பள்ளிக்கு சென்று மீதமுள்ள ஆசிரியர்களை அனுப்பி வைக்கவேண்டும்.

30 நிமிடங்களுக்கு மேலாக தேர்வு நடைபெறாது. ஆசிரியர்கள் தங்களுடைய Teacher EMID ID & Password ஐ பயன்படுத்தி தேர்வினை எழுத வேண்டும். சரியான நேரத்திற்கு சென்று தேர்வினை முடித்து விட்டு, தங்களுடைய பள்ளிக்கு உடனடியாக திரும்ப வேண்டும். இத்தேர்வினை Hi tech lab   இல் மட்டுமே எடுக்க முடியும்.

ஆசிரியர்கள் தங்களுடைய மொபைல் அல்லது லேப்டாப் ஆகியவற்றில் எடுக்க இயலாது. அனைத்து தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி பெறும் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கண்டிப்பாக, பங்கேற்க வேண்டும். தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக 15 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு வீடியோ காண்பிக்கப்படும். அந்த வீடியோ காட்சிகளை அனைவரும் ஒன்றாக அமர்ந்து கண்டு முடித்தவுடன் இருக்கக்கூடிய கணினிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் அமர வைக்கப்பட்டு, திரையில் தோன்றும் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். மற்ற ஆசிரியர்கள் ஒவ்வொரு பிரிவாக இத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தொடக்க நிலை வகுப்புகளுக்கு கற்பிக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் இது பொருந்தும். பிற பட்டதாரி அல்லது முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்க வகுப்புகள் எடுப்பின் அவர்களுக்கு இது பொருந்தாது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive