NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்றைய பயனுள்ள தகவல்கள் - 22.01.19

திருக்குறள்



அதிகாரம்:ஒழுக்கம் உடைமை

திருக்குறள்:139

ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

விளக்கம்:

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.

பழமொழி

இனம் இனத்தோடு சேரும்.

Birds of the same feather flock together.

இரண்டொழுக்க பண்புகள்

* எனக்கு சிறு பணி கொடுக்கப் பட்டாலும் அவற்றை மிக செம்மையாக செய்து முடிப்பேன்.
* பள்ளிச் சூழலை பசுமையாக பாதுகாப்பேன்.

பொன்மொழி

மனநிறைவே மாபெரும் செல்வமாம்.

   - புத்தர்

  பொது அறிவு

1.இந்தியாவின் மிகப்பெரிய நாடாளுமன்ற தொகுதி எது?

மல்கஜ்கிரி ( தெலுங்கானா)

2.செந்தமிழ் சொற்பொருள் களஞ்சியம் - 10 தொகுதிகளை தொகுத்தவர் யார்?

இரா.இளங்குமரனார்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

தினை அரிசி

தினையின் வேறு பெயர்களாக இறடி, ஏனல், கங்கு என அழைக்கப்படுகிறது.

* உடலை வலுவாக்கும், சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு. இது மிகச்சூடு உள்ளது. வாயு நோயையும், கபத்தையும் போக்கும்.

* தினையரிசி – உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சாதம் – வலிமையைப் பெருக்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி – வீக்கங்களை ஒழிக்கும்.

* இதன் அரிசியைச் சிலர் சமைத்து உணவாகக் கொள்வர். இது வெப்பத்தை உண்டு பண்ணும். எனினும், உடலைக் காக்கும் தன்மையுடையது.

English words and Meaning

Method. முறை,படிநிலை,
Matter    தகவல், ஊடகம்
Member    உறுப்பினர்
Middle       நடுநிலைமை
Mutual    இருதரப்பு

அறிவியல்
விந்தைகள்

*அஜினோமோட்டோ*
அஜினோமோட்டோ எனும் ஒரு சுவை சேர்க்கும் பொருள் இப்போதெல்லாம், எல்லாவகை சைனீஸ், இந்திய உணவு வகைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது.இதன் பிறப்பிடமான சீனாவே, இதை தடை செய்யப்பட்ட இரசாயனமாக அறிவித்தது. காரணம் அஜினோமோட்டோ சேர்க்கப்பட்ட உணவால் மோசமான சிறுநீரக செயலிழப்பு (kidney failure) நோயால் அங்குள்ள மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். சீனா இந்த வேதிப்பொருளை தங்கள் நாட்டை விட்டு விரட்டி பலகாலங்கள் ஆனாலும், ஒரு நாட்டின் கழிவுப் பொருளை உணவாக ஏற்றுக்கொண்டு, அதனை பெருமையாக நினைத்து நம்நாட்டு நகரங்களிலும் கிராமங்களிலும் உணவுகளில் பயன்படுத்துகிறோம். அஜினோமோட்டோவில் 10% மெத்தனால் கலந்துள்ளது. அது ஒரு நேரடி விஷம். கள்ளச்சாராயங்களில் காணப்படும் மெத்தனால்தான் இது. இதன் மூலம் கண் எரிச்சல், நரம்புத்தளர்ச்சி போன்றவை நாளடைவில் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதைவிட பயங்கரமாக இது மரபுக்கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

 🌹

Some important  abbreviations for students

* BCC.   -     Blind Carbon Copy

B Pharma     -    Bachelor of Pharmacy

நீதிக்கதை

கோட்டையூர் என்ற ஊரில் அருணாச்சலம் என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவன். வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எது நடந்தா லும் எல்லாம் கடவுள் செயல் என்று சொல்வான்.

இதனால் எதை பற்றியும் கவலைப்படமாட்டான். இறைவன் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பது இவனுடைய கொள்கை. அதே ஊரில் தங்கையா என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் அருணாச்சலத்திற்கு நேர் எதிர்.

கடவுளே இல்லை என்று சொல்லும் கொள்கையுடையவன். வசதிக்கு குறைவில்லை. எனவே, அருணாசலத்தை பார்க்கும் போதெல்லாம் மிகவும் கிண்டல் செய்வான். காரணம் அருணாச்சலம் ஏழை. அதனால் அவனது கிண்டலுக்கு கேட்கவேண்டுமா?

நீ நம்பி இருக்கிற கடவுள் உன்னை மட்டும் ஏழையாக வைத்துவிட்டு என்னை மட்டும் பணக்காரனாக படைத்திருக்கிறான் பார்த்தாயா? இப்படியெல்லாம் பேசி நக்கல் செய்வான்.

அதற்கு அருணாச்சலம் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அதை இறைவனை தவிர யார் அறிய முடியும் என்று சொல்வான். இப்படியாக தங்கையா கிண்டல் செய்வதும் அருணாச்சலம் பதில் சொல்வதுமாக இருந்தான்.

ஒரு நாள் உச்சி வெயில் மண்டையை பிளந்தது. அப்போது அந்த வழியாக குடை பிடித்து கொண்டு வந்து கொண்டிருந்தான் தங்கையா. குடை வாங்க வசதியில்லாத அருணாச்சலம் வெயிலில் வேர்வை வழிந்தோட வந்து கொண்டிருந்தான். அவனை கண்டதும் அருணாச்சலத்திற்கு ஏக குஷி.

வழக்கம் போல் அருணாச்சலத்தை வம்புக்கு இழுத்தான். “”என்ன அருணாச்சலம் வெயிலில் வேர்க்க விறுவிறுக்க எங்க போயிட்டு வர்ற? எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் உனக்கு ஒரு குடை கொடுக்க வேண்டும் என்று அந்த கடவுளுக்கு தெரியாதா! என்னய்யா சாமி?” என்று நக்கல் செய்தான்.

வெயில் கொடுமை ஒரு பக்கம்; அவனது தொடர் தொல்லை ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு அருணாச்சலத்தை எரிச்சல் படுத்தியது.

“”அந்த கடவுளின் கருணை இல்லையென்றால் உன் கையில் குடை இருந்தாலும் நீ அதை பிடித்து செல்ல முடியாது. அதை கையில் வைத்து கொண்டு தலை காய ஓடுவாய் என்பதை மட்டும் மறந்துவிடாதே. இறைவனது கருணையை எப்போதும்
கிண்டல் செய்யாதே,” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தான்.

பெரிய தத்துவம் சொல்றான் என்று சிரித்து கொண்டே நடந்தான் தங்கையா. சிறிது துõரம் கூட நடந்திருக்கமாட்டான் அதற்குள் வெறி நாய் ஒன்று அவனை துரத்த ஆரம்பித்தது. உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தான் தங்கையா. நாயோ பயங்ரமாக துரத்தியது.

குடையை பிடித்து கொண்டு ஓடுவதற்கு சிரமமாக இருந்தது. எனவே, குடையை மடக்கி கையில் வைத்து கொண்டு ஓட்டமாக ஓடி உயிர் தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

அப்பொழுதுதான் அவன் மனதில் அருணாச்சலம் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

கடவுளின் கருணை இல்லாவிட்டால் கையில் குடை இருந்தாலும் பிடிக்கமுடியாது என்பதை உணர்ந்தான். அவனை அறியாமல் ஒருவித பயம் அவனை ஆட்கொண்டது. அன்றிலிருந்து கடவுளின் அருளை நம்ப ஆரம்பித்தான் தங்கையா

இன்றைய செய்திகள்
22.01.2019

* ரயில் பயணிகளின் தொடர் புகார் எதிரொலி: ரத்து செய்யப்படும் டிக்கெட் தொகை உடனடியாக கிடைக்க புதிய திட்டம்: ஐஆர்சிடிசியின் ‘பேமென்ட் கேட்வே’ விரைவில் தொடக்கம்.

* தமிழகத்தில் பிப்ரவரி 3-ம் தேதி நடக்க இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

* ஒடிசாவில் 2 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பொருட்களை இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபடித்துள்ளனர்.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர் அதிர்ச்சி தோல்வி; மகளிர் பிரிவில் கெர்பர் வெளியேற்றம் .

* தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Today's Headlines

* Regular complaints of train passengers echo: new tariff for immediate access to canceled ticket amount: IRCC's 'Payment Gateway' will be launched soon.

* The polio drops camp which will be  held on February 3 in Tamil Nadu is postponed.

*  Indian Archeologists have found 2,300 years ago archeological things in Odhisa.

* Australian Open Tennis: Federer's shock defeat; Gerber discharge in women's section

* Tamilnadu won the championship title after 20 years in the National Senior Hockey Championship.

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive