உலகில் உள்ள தண்ணீரின் பெரும்பகுதி கடலில் உப்பு நீராகத்தான் இருக்கிறது. இந்தக் கடலுக்கு மழை நீர் மூலம் தண்ணீர் வந்துசேர்கிறது. மழைநீர் பாறைகள், மணல்களைக் கரைத்துக்கொண்டு ஆறுகளில் சேர்கிறது. இப்படி வரும்போது பாறைகள், மணல்களில் உள்ள தாதுக்களையும் உப்புகளையும் எடுத்துக்கொண்டு செல்கிறது. ஆறுகள் இந்த நீரைக் கடலில் சேர்த்துவிடுகின்றன. கடலில் சேரும் நீர் வெப்பத்தால் ஆவியாகிறது. தண்ணீரில் உள்ள உப்பு மட்டும் கடலிலேயே தங்கிவிடுகிறது. ஆவி, மேகமாகக் குளிர்ந்து மீண்டும் மழையாகப் பொழிகிறது. அந்த நீர் தாதுக்களையும் உப்புகளையும் எடுத்துக்கொண்டு ஆறு மூலம் கடலில் சேர்த்துவிடுகிறது. இப்படித்தான் கடல் நீர், உப்பு நீராக இருக்கிறது.
TET Study Materials
Home »
» அறிவியல் அறிவோம் - கடல் நீர் உப்புக் கரிப்பது ஏன்?
அறிவியல் அறிவோம் - கடல் நீர் உப்புக் கரிப்பது ஏன்?
உலகில் உள்ள தண்ணீரின் பெரும்பகுதி கடலில் உப்பு நீராகத்தான் இருக்கிறது. இந்தக் கடலுக்கு மழை நீர் மூலம் தண்ணீர் வந்துசேர்கிறது. மழைநீர் பாறைகள், மணல்களைக் கரைத்துக்கொண்டு ஆறுகளில் சேர்கிறது. இப்படி வரும்போது பாறைகள், மணல்களில் உள்ள தாதுக்களையும் உப்புகளையும் எடுத்துக்கொண்டு செல்கிறது. ஆறுகள் இந்த நீரைக் கடலில் சேர்த்துவிடுகின்றன. கடலில் சேரும் நீர் வெப்பத்தால் ஆவியாகிறது. தண்ணீரில் உள்ள உப்பு மட்டும் கடலிலேயே தங்கிவிடுகிறது. ஆவி, மேகமாகக் குளிர்ந்து மீண்டும் மழையாகப் பொழிகிறது. அந்த நீர் தாதுக்களையும் உப்புகளையும் எடுத்துக்கொண்டு ஆறு மூலம் கடலில் சேர்த்துவிடுகிறது. இப்படித்தான் கடல் நீர், உப்பு நீராக இருக்கிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...