NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஐ.டி.பி.ஐ. வங்கியில் 920 வேலைவாய்ப்புகள் | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019

ஐ.டி.பி.ஐ. வங்கியில் 920 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய தொழில் வளர்ச்சி வங்கி சுருக்கமாக ஐ.டி.பி.ஐ. என அழைக்கப்படுகிறது.

தற்போது இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி, நிர்வாக அதிகாரி மற்றும் உதவி மேலாளர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 920 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் உதவி மேலாளர் பணிக்கு 500 இடங்களும், எக்சிகியூட்டிவ் பணிக்கு 300 இடங்களும், சிறப்பு அதிகாரி பணிகளுக்கு 120 இடங்களும்தனித்தனி அறிவிப்பின் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... 500 உதவி மேலாளர் பணிகள் உதவி மேலாளர் பணி விண்ணப்பதாரர்கள் 1-3-2019-ந் தேதியில் 21 வயது நிரம்பியவர் களாகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் ரூ.700-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் இணையதளம் வழியாக ஏப்ரல் 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மே 17-ந் தேதி இதற்கான ஆன்லைன் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. 300 எக்சிகியூட்டிவ் பணிகள் எக்சிகியூட்டிவ் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-3-2019-ந் தேதியில் 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் ஏப்ரல் 15-ந் தேதியாகும். இதற்கான தேர்வு மே 16-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. 120 சிறப்பு அதிகாரி பணிகள் டெபுடி ஜெனரல் மேனேஜர், பொது மேலாளர், உதவி பொது மேலாளர், மேலாளர் போன்ற சிறப்பு அதிகாரி பணிக்கு 120 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணியிடங்களில் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. சி.ஏ., சி.எப்.ஏ., எம்.பி.ஏ., படித்தவர்களும், குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பும், கல்வி மற்றும் பணிஅனுபவ விவரம் வேறுபடுவதால் முழுமையான விளம்பர அறிவிப்பில் அந்தந்த பணிக்கான சரியான தகுதி விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும். விண்ணப்பிக்கவும், இவை பற்றிய கூடுதல் விவரங்களை www.idbi.com என்ற இணைய தளத்தை பார்க்கலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive