Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NEET 2019 Exam - Important Dates [ Exam Date - May 5 , Hall Ticket Download Date - April 15 , Result Date : June 5 ]

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான நீட்
தேர்வு மே 5-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் ஹால்டிக்கெட்டை வரும் 15-ம்தேதி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2019-20 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்), வரும் மே 5-ம் தேதி பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தும் நீட் தேர்வுக்கு கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கிடையே, 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம்கடந்த வாரம் உத்தரவிட்டது. இதையடுத்து நீட்தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. நாடு முழுவதும் இருந்து நீட் தேர்வுக்கு 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
ஜுன் 5-ல் தேர்வு முடிவு
இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை வரும் 15-ம் தேதி www.nta.ac.in / www.ntaneet.nic.in இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி,தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாம், வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படும் என்பதுகுறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive