பத்து வருடமாக நீடிக்கும் முரண்பாட்டினை சரிசெய்ய வேண்டி தமிழக முதல்வர் மற்றும் கல்வி அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை..
*******************************
2012 ஜீலை 12-ம் தேதி TRB-ஆல் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தமிழகத்தில் முதல் முறையாக நடத்தப்பட்டது.
தேர்வு முடிந்து வெளியே வந்த பல ஆசிரியர்கள் தேர்வில் கேள்வியை படித்துப்பார்க கூட போதிய நேரம் இல்லை , (150 கேள்விகளுக்கு 90 நிமிடம்) எனவே கண்டிப்பாக தோல்வியடைந்துவிடுவேன் என கண்ணீர் விட்டு அழுதனர்..
தேர்வு முடிவுகள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
6.76 லட்சம் பேர் தேர்வு எழுதியதில், 0.36 சதவீதம் பேர் மட்டுமே...
அதாவது, 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இதில், இடைநிலை ஆசிரியர்கள் - 1735 பேரும்,
பட்டதாரி ஆசிரியர்கள் - 713 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தி, பெரிய எண்ணிக்கையில் நியமனம் செய்ய திட்டமிட்ட அன்றைய அரசு,
கடுமையான போட்டியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காமல் நிறுத்தி வைத்து விட்டு,
முதல் TET தேர்வில் தோல்வி அடைந்த 6.56 லட்சம் பேருக்கும், மறுதேர்வு வைக்க திட்டமிட்டது.
மறு தேர்வில் புதிதாக 20,000 பேர் விண்ணப்பித்தனர்.
முதல் TET தேர்வில் தோல்வியடைந்த 6,50,000 பேர் மற்றும் புதிதாக விண்ணப்பித்த 20,000 பேர் ஆகிய அனைவருக்கும் 14.10.2012-ல் மறு TET தேர்வு நடைபெற்றது.
முன்னர் தேர்வு வைக்கப்பட்டபோது நிர்ணயிக்கப்பட்ட நேரமான
1.30 மணி நேரத்தை (150 வினாக்களுக்கு 90 நிமிடங்கள்), 3.00 மணி நேரமாக உயர்த்தி (150 வினாக்களுக்கு 180 நிமிடங்கள்) அக்டோபர் 14-ல் மறு தேர்வு நடத்தப்பட்டது.
இந்த மறு தேர்வில், 19,246 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில். இடைநிலை ஆசிரியர்கள் 10397 பேரும்,
பட்டதாரி ஆசிரியர்கள் 8849 பேரும் தேர்வாகினர்.
குறைந்த நேரத்தில் முதல் TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குத் தான் முதலில் பணி நியமனம் வழங்கப்படும் என்றும், மறு தேர்வில் கூடுதல் நேரத்தில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுடன் இவர்களை ஒப்பிட முடியாது என்றும் TRB அதிகாரிகள் தெரிவித்ததாக நாளிதழில் செய்தி வெளியாகியது..
ஆனால் அவ்வாறு அன்றைய அரசு செய்யவில்லை,
முதல் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1735 இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண் 1 to 1735 வரை வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மறு தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 1736 முதல் ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண் வழங்கப்பட்டது.
இந்த வரிசை எண் அடிப்படையில் 11.12.2012 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் தேர்வு செய்ய முதலில் முன்னுரிமை வழங்கப்பட்டது.
(ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு TRB-யின் வரிசை எண் ஒன்றிய அளவில் முன்னுரிமை பட்டியல் தயாரிக்க பயன்படுத்தப்படவில்லை.
1995-ல் TRB-யின் மூலம் நியமனமான இடைநிலை ஆசிரியர்களுக்கு, TRB யின் வரிசை எண்ணின் படியே முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.)
பெரிய எண்ணிக்கையில், பிரமாண்டமாக நியமன ஆணை வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக.
இருவேறு தேர்வுகளில் வெற்றிபெற்ற அனைவரையும் சென்னைக்கு வரவழைத்து, பெரிய விழா மேடையில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது,
தனித்தனியே அறிவிப்பு வெளியிடப்பட்டு, தனித்தனியே தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகளும் தனித்தனியே வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பும் தனித்தனியே நடத்தப்பட்ட நிலையில்,
இருவேறு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஒரே நாளில் பணி ஆணை வழங்கி, 17.12.2012 அன்று ஒரே நாளில் பணியேற்க செய்த தவறான நடைமுறையால்,
பணியேற்ற ஒன்றியத்தில் இருவேறு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களை ஒன்றாக இணைத்து வயது அடிப்படையில் முன்னுரிமை பட்டியல் தயாரித்தனர்,
இதனால், தமிழகம் முழுவதும் முதல் தேர்வில் (ஜீலை-12) தேர்ச்சி பெற்று TRB-ன் முதல் 1735 வரிசை எண்ணில் இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பெரும்பாலானோர்,
முதல் தேர்வில் தோல்வியுற்று பிறகு மீண்டும் மறு தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு கீழே முன்னுரிமைப் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால், 1.30 மணி நேரத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும்,
தோல்வியுற்று மீண்டும் 3 மணி நேரம் நடைபெற்ற மறு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது,
இதனால், பதவி உயர்வு, பணி நிரவல், பணி இடமாறுதல் போன்ற அனைத்திலும் முன்னுரிமை பணிக்காலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களால் வழங்கப்பட்ட பணி நியமன ஆணையில் Exam type என்பதில்,
முதல் TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு -Main Exam என்றும்,
மறு TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு - Supplementary Exam என்றும் பிரித்து காட்டி பணி ஆணை வழங்கியுள்ளனர்.
இந்த வித்தியாசத்தை ஒன்றிய அளவிலும் பின்பற்றி தனித் தனியே முன்னுரிமைப் பட்டியல் தயாரிப்பதே சரியாகும்.
எனவே 12.07.2012 அன்று நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும், அதன் பின்னர் 14.10.2012 அன்று நடைபெற்ற மறு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும் வெவ்வேறு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாகவே கருதிட வேண்டும் என்றும்,
(12.07.2012-ல் நடைபெற்ற தேர்வில் தேர்வு எழுதாத, 20,000 புதிய தேர்வர்கள் 14.10.2012-ல் தேர்வு எழுதியதால் - இவை இரண்டையும் ஒரே தேர்வாக கருதக் கூடாது என்றும்)
மேலும் அன்றைய அரசின் தவறான வழிகாட்டுதலால் வேறு வழியின்றி ஒரே நாளில் பணியேற்றிருந்தாலும், ஒன்றிய அளவில் இருவேறு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாகவே கருதி முதல் (12.07.2012) தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனியே ஒன்றிய அளவில் முன்னுரிமை பட்டியலும்,
இரண்டாவதாக நடந்த தேர்வில் (14.10.2012) தேர்ச்சி பெற்று பணியேற்றவர்களுக்கு தனியே முன்னுரிமை பட்டியலும் தயார் செய்திட வேண்டும் என்றும்,
ஏற்கனவே ஒன்றிய அளவில் தயார் செய்த முன்னுரிமை பட்டியலை ரத்து செய்திட வேண்டியும் பாதிக்கப்பட்டவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்..
பத்துவருடங்களாக பாதிக்கப்பட்டு வரும் ஆசிரியர்களின் முன்னுரிமை முரண்பாட்டினை இன்றைய முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களும், மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களும் சரிசெய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பதவி உயர்விற்காக காத்திருக்கின்றனர்..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...