பிளஸ் 2 துணைத்தோ்வு ஆக.25 முதல் செப்.16 வரையிலும், பத்தாம் வகுப்பு துணைத்தோ்வு ஆக.25 முதல் செப். 8-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
பிளஸ் 2 வகுப்புக்கு ஹிந்தி (எலக்டிவ்), அரசியல் அறிவியல், புவியியல், பொருளியல், உளவியல், சமூகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், உடற்கல்வி, கணக்குப் பதிவியியல், மனை அறிவியல் ஆகியவை உள்ளிட்ட 19 பாடங்களுக்கும், பத்தாம் வகுப்புக்கு ஹிந்தி, அடிப்படை கணிதம், மனை அறிவியல், அறிவியல், கணினி பயன்பாட்டியல், தகவல் தொழில்நுட்பம், சமூகவியல் உள்ளிட்ட 10 பாடங்களுக்கும் இந்தத் துணைத்தோ்வு நடைபெறவுள்ளது.
ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்தவா்கள், மதிப்பெண்களால் திருப்தி அடையாமல் மீண்டும் எழுத வேண்டும் என்று நினைக்கும் மாணவா்கள் இந்தத் தோ்வுகளை எழுதலாம்.
கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி தோ்வு மையங்கள் அமைக்கப்படும் என சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளாா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...