தமிழ்நாடு அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பாராட்டும் படி உள்ளது:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்ற மாநிலப் பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன்
புதுக்கோட்டை,ஆக.13:தமிழ்நாடு
அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பாராட்டும் படி உள்ளதாக
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர்
மன்றம் நா.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
இது
குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:தமிழ்நாடு
நிதி நிலை அறிக்கை காகிதம் இல்லாத டிஜிட்டல் வடிவில் முதன்முதலில்
படைக்கப்பட்டு இருப்பதும்,
கடுமையான நிதி
நெருக்கடியிலும் தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்
எனும் உறுதிமொழி நிதிநிலை அறிக்கையில் அளிக்கப்பட்டு இருப்பதும்
பாராட்டுக்குரியதாகும்.
தமிழ்வளர்ச்சிக்கு
முன்னுரிமை அளிக்கப்பட்டு 80கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதும்,அனைத்து
துறைகளிலும் தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட்டு இருப்பதும்,
ரூ 10இலட்சம் பரிசுப் பணத்துடன் சூன் 3 ஆம்நாளில் செம்மொழி விருது வழங்கப்படுவதும்,
தொல்லியல் துறைக்கு ரூ 29கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதும்,
தமிழரின் தொன்மையை மெய்ப்பிக்கும் அகழ்வாய்வு பணிகளுக்கும்,
கீழடி கண்காட்சிக்கும்
வழிவகை செய்யப்பட்டு இருப்பதும் வரவேற்புக்குரியதாகும்.
பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ 3/வரிகுறைப்பு செய்து ஏழை,எளிய,நடுத்தர,
மத்திய தர பகுதி மக்களுக்கு அன்றாடச் செலவில் பேருதவி செய்து இருப்பது பெரும் வரவேற்புற்குரியதாகும்.
தமிழ்நாட்டுக்கென தனித்துவமான தனிக்கல்விக்கொள்கை உருவாக்கப்படும் எனும் அறிவிப்பும்,
பள்ளிக்கல்வித்துறைக்கு
ரூ 32,599.54கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு
இருப்பதும்,நடுநிலைப்பள்ளிகளில் கணினி வகுப்பறைகள் அமைத்திட ரூ114.18கோடி
நிதி ஒதுக்கி இருப்பதும்,எட்டு வயது உடைய குழந்தைகளின் கல்வி அறிவினை
உறுதிப்படுத்திடும் வகையில் எண்ணும்-எழுத்தும் இயக்கம் உருவாக்கி
ரூ88.70கோடி நிதி ஒதுக்கி இருப்பதும்,413கல்வி ஒன்றியங்களுக்கு தலா 40
கையடக்க கணினிகள் (டேப்லெட்டுகள்)வழங்கப்படுவதும் பெருத்த
வரவேற்புக்குரியதாகும்.
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த நிதிநிலை அறிக்கைவழியிலான
அறிவிப்புகள் கல்விச் சிறந்த தமிழகம் அமைந்திடுவதற்கான முன்னோடி நடவடிக்கைகளாகும்.
உயர்கல்வித்துறைக்கு
ரூ5,052.84 கோடி ஒதுக்கி இருப்பதும்,10அரசு கலைக்கல்லூரிகள் அமைக்கப்படும்
என்பதும்,சித்தா பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்பதும் பெரும்
வரவேற்புற்குரியதாகும்.
தமிழ்நாட்டின்ஆசிரியர்
-அரசூழியர்கள் பணிக்காலத்தில் மரணம் அடைந்தால் வழங்கப்படும் குடும்ப நல
பாதுகாப்பு நிதி ரூ5 இலட்சமாக அதிகரிக்கப்பட்டு இருப்பதும்,
பெண்
ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பினை 9மாதத்தில் இருந்து
12மாதங்களாக உயர்த்தப்பட்டு இருப்பதும் பெருத்த வரவேற்புற்குரியதாகும்.
தமிழ்நாட்டின்
கடுமையான நிதிநெருக்கடியிலும் புதிய தற்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம்
இரத்து செய்வது உள்ளிட்ட ஆசிரியர்-அரசு ஊழியர்களின் எதிர் பார்ப்புகள்
படிப்படியாக நிறைவேற்றப்படும் எனும் வகையிலும்,தேர்தல் கால வாக்குறுதிகள்
படிப்படியாக நிறைவேற்றப்படும் எனும் வகையிலும் உறுதிமொழி அளிக்கப்படுவதும்
பெருத்த பாராட்டுக்குரியதாகும்.
தமிழ்நாட்டின் அனைத்துத்தரப்பினரும் மனம் நிறைந்து வரவேற்று ,பாராட்டும் நிதிநிலை அறிக்கையில் ஆசிரியர்,அரசு ஊழியர்,
ஓய்வூதியதாரர்களுக்கு அறிவிப்பு வெளியாகும் என்று பெருமளவில் எதிர்பார்த்து இருந்த அகவிலைப்படி
எதிர்வரும்
01.04. 2022 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் எனும் அறிவிப்பை
திரும்பப் பெற்றுக் கொண்டு தமிழ்நாட்டின் ஆசிரியர்,அரசு ஊழியர்,
ஓய்வூதியத்தாரர்களின் எதிர்பார்ப்பினை முன் கூட்டியே விரைந்து நிறைவேற்றிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்வர வேண்டுமாய் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகிறது என தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...