அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நாடு முழுவதும் உள்ள அரசு துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்பிட அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதன்படி, GD Constable பணிகளுக்கு 25,271 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் கீழே வழங்கியுள்ள தகவல்கள் மற்றும் தகுதிகளை கொண்டு தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
இந்த GD Constable பணிகளுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 02.08.1998 அன்று முதல் 01.08.2003 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். அரசு பாடத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யபடுவர். அவ்வாறு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம்ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.69,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
General/ OBC விண்ணப்பதாரர்கள் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் SC/ ST/ PWD/ Ex-Serviceman விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் இணைய முகவரி , தேர்வுக்கான பாடத்திட்டாம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகியவற்றினை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
Download SSC Notification 2021 Pdf
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...