Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: முதல்வர் முனைவர் பெ.நடராஜன் தகவல்

புதுக்கோட்டை,ஆக.17: 2021-2022 ஆம் கல்வியாண்டில் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் பெ.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள  செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: விண்ணப்பங்கள் இணையதளத்தில் https://scert.tnschools.gov.in என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.இவ்விணையதளத்தில் உரிய கட்டணங்களைச் செலுத்தி தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவு / பிற்படுத்தப்பட்ட பிரிவு/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ரூ. 500,மாற்றுத் திறனாளிகள்/ ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ 250 நிர்ணயிக்கப்பட்டுள்ளன.இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அளிக்கும் விவரங்கள் சரியானவையாக இருக்க வேண்டும்.அவர் அளிக்கும் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்த பின்னரே சேர்க்கை உறுதி செய்யப்படும்.

தொடக்க கல்வி பட்டயப் படிப்பிற்கு சேர்க்கை பெற விரும்புவோர் மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.பொதுப்பிரிவினர்  (OC) குறைந்த பட்சம் 50 விழுக்காடு மதிப்பெண் (600/1200,300/600) மற்றும் பிற்படுத்தப்பட்டோர்/ பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / ஆதிதிராவிடர்/ ஆதிதிராவிடர் அருந்ததியர் / பழங்குடியினர் (BC/BCM/MBC/SC/SCA/ST) பிரிவினர் குறைந்த பட்சம் 45 விழுக்காடு (540/1200,270/600) மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.

30.07.2021 அன்று அதிபட்ச வயது 30 -க்கு  மிகாமல் இருக்க வேண்டும்.ஆதிதிராவிடர்,பழங்குடியினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 35 ஆகும்.ஆதரவற்றோர்,கணவரால் கைவிடப்பட்ட பெண்டிர் மற்றும் விதவைகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும்.கலப்புத் திலுமணத் தம்பதியினரில் பொது/ பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 31.07.2021 அன்று அதிகபட்ச வயது வரம்பு 32 மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினத்தவருக்கு 31.07.2021 அன்று அதிகபட்ச வயது 37 ஆகும்.

மாற்றுத்திறனாளிகள்,முன்னாள் படைவீரரின் குழந்தைகள்,சுதந்திர போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் ஆகியோருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளது.விண்ணப்பத்தினை  https:scert.tnschools.gov.in என்ற இணையதளத்தில் 27.08.2021 அன்று மாலை 5 மணிக்குள் உரிய கட்டணத்துடன் அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive