தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தற்போது சேலம் மாவட்டத்திற்கு
கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த கூடுதல் கட்டுப்பாடுகளை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார். என்னென்ன கட்டுப்பாடுகள் முழு விவரங்கள் பின்வருமாறு:
சேலம்
மாவட்டத்தில் உள்ள அனைத்து மால்கள் ஜவுளி கடைகள் நகைக் கடைகள் வணிக
வளாகங்கள் சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகியவை ஏசி வசதி இன்றி மாலை 6 மணி வரை
மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள
வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று செயல்படும் முற்றிலும் தடை
விதிக்கப்படுகிறது.செவ்வாய்பேட்டை மெயின் ரோடு ,நாவலர் நெடுஞ்செழியன் சாலை
,லாங்லி ரோடு பால் மார்க்கெட், லீ பஜார், வீரபாண்டியார் நகரப்பகுதியில்
உள்ள அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்க
வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாஉசி மார்க்கெட் சின்ன கடை
வீதி ஆகிய இடங்களில் செயல்படும் பூ பழம் மற்றும் காய்கறி கடைகள் மாலை 6 மணி
வரை மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டில் இருந்து
சுற்றுலா பயணிகள் வரை முற்றிலும் தடை விதிக்கப்படுவதாகவும், பிற நாட்களில்
ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா 2 தவணை செலுத்தி அதற்கான
சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
இறைச்சி மற்றும் மீன் கடைகள் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு
திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை உள்ளாட்சி
அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கொங்கணாபுரம் வாரசந்தை வீரகனூர்
வாரசந்தை வருகிற 23-ஆம் தேதி வரை செயல்பட தடை விதிக்கப்படுவதாகவும்,
மேட்டூர் அணை பூங்கா வருகிற 23-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...