நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் சிறந்து விளங்கிய சாரண சாரணிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் கொரோனோ இரண்டு தவணைத் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தப்படாத ஆசிரியர்களின் விவரங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் சார்பில் திரட்டப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக சுகாதாரத் துறை உதவியுடன் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கொரனோ காலகட்டத்தில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன நிலையில் பாடத்திட்டங்கள் 50 முதல் 65 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டாலும் மாணவர்கள் அடிப்படையில் தெரிந்து கொள்ளத் தேவையான அனைத்து பாட பகுதிகளும் ஆசிரியர்களின் சார்பில் கற்றுக் கொடுக்கப்படும்.
கொரனோ காலகட்டத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாத நிலையில் விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாநில முதன்மை ஆணையர் இளங்கோவன், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் கலந்து கொண்டனர். மேலும் மாநிலங்கள் முழுவதுமுள்ள சாரண சாரணிய மாணவ மாணவியர்கள் இதில் பங்கேற்றனர்
DA ஐ ஓச்சுப்புட்டாங்களாமப்பா.யார் ஓசியில அனைத்தும் கேட்டா?
ReplyDelete