Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2026

பராக் உசைன் ஒபாமா  





திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:464

குறள்:

 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர். 

பொருள்:

தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.  

பழமொழி :

Lamp at home and a lion at chase

பார்த்தல் பூனை, பாய்ந்தால் புலி.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. நான் எனது வாழ்நாளில் யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கிழைக்க மாட்டேன்.

 2.என்னால் இயன்ற நன்மையை மற்றவர்களுக்குச் செய்வேன்.

பொன்மொழி : 

மழைத்துளி சிறியது; ஆனால் அதன் பலன் அளவற்றது.

Thought for the Day :

Rain is nature's blessing to the Earth.

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டு மாநில அரசின் இலச்சு ( Tamilnadu state emblem) எது?

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம். 

2. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்துடன் கூடிய தமிழக அரசின் மாநில சின்னத்தை வடிவமைத்தவர் யார்? 

R. கிருஷ்ணா ராவ்.

English words :

Prudent – Acts wisely, விவேகமானவர்.

Compassionate – Shows kindness, இரக்கமுள்ளவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

முக்கிய நதிகள்

கங்கை

யமுனை

பிரம்மபுத்திரா

கோதாவரி

கிருஷ்ணா

காவிரி

நர்மதா

தபதி

NMMS :

MAT 

மகரந்தச் சேர்க்கை அடிப்படையில் பொருந்தாததைத் தேர்ந்தெடு 

 (1) ஆப்பிள்

 (2) பூசணி

 (3) தக்காளி

 (4) பிளம்ஸ் 

 விடை: (3) தக்காளி

ஆகஸ்ட் 04

பராக் உசைன் ஒபாமா  அவர்களின் பிறந்தநாள்

பராக் உசைன் ஒபாமா (Barack Hussein Obama, பிறப்பு: ஆகத்து 4, 1961), அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார்.அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

நீதிக்கதை

"புதிய யோசனையின் வெ ற்றி" ஒரு கிராமத்தில் சுதன் என்ற மாணவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்போதும் மற்றவர்கள் செய்வதையே செய்து வந்தான். ஆனால் அவனுடை ய தோழி ஸ்மிதா, "புதியதாக யோசித்தால்தான் புதிய வெற்றிகள் கிடைக்கும்" என்று நம்பினாள்.

ஒருநாள் பள்ளியில் ஆசிரியர், "வீட்டில் பயன்படும் ஒரு புதிய கருவியைக்  உருவாக்குங்கள்" என்று கூறினார்.

பல மாணவர்கள் ஏற்கனவே இருந்த பொருட்களைப்  போவே செய்து வந்தனர். ஆனால் ஸ்மிதா மட்டும், மழை நீரை சேமித்து தாவரங்களுக்கு தானாகவே தண்ணீரை பாய்ச்சும் ஒரு எளிய கருவியை உருவாக்கினாள்.

அதைப் பற்றி புத்தகங்கள் படித்தும், இணையத்தில் தெரிந்துக்கண்டும், ஆசிரியர்களிடம் கேட்டும் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டாள்.

அவளது புதிய சிந்தனையும், கற்றுக்கொள்ளும் ஆர்வமும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. போட்டியில் முதல் பரிசையும் பெற்றாள்.

அப்போது ஆசிரியர் கூறினார்: "புதிய விஷயங்களைக் கற்றறிந்து, புதுமையாக யோசிப்பவர்கள்தான் நாளைய உலகை மாற்றுபவர்கள்."

நீதி:

புதுமையாக யோசித்து, புதிய விஷயங்களைக் கற்றறிந்து, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். அதுவே முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் வழிவகுக்கும். 

இன்றைய செய்திகள்

04.08.2026

🗒️காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்துகளை பகிர்ந்தார்.

🗒️ இந்தியா - இத்தாலி நட்புறவைக் கொண்டாடும் விதமாக புதிய “மெலோடி” மிட்டாயை அறிமுகம் செய்த பார்லே நிருவனம்.

🗒️ராணுவத்தில் ஏ.ஐ. பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் - சீன அதிபர் ஜின்பிங் உத்தரவு.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏀2026 காமன்வெல்த் விளையாட்டு நிறைவு: 2030 போட்டிகளை நடத்தும் இந்தியா... கொடி ஒப்படைப்பு
2030 காமன்வெல்த் போட்டிகள் குஜராத் 
அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ளன...

Today's Headlines

🗒️ President Droupadi Murmu congratulated the players who won medals in the Commonwealth Games.

🗒️ Parle company introduced a new candy called “Melody” to celebrate the friendship between India and Italy.

🗒️ Chinese President Xi Jinping ordered the military to increase the use of Artificial Intelligence (AI).

🏀 Sports News

🏀 The 2026 Commonwealth Games have ended. India will host the 2030 Commonwealth Games. The flag was handed over to India.

🏟️ The 2030 Commonwealth Games will be held in Ahmedabad, Gujarat.


Covai women ICT_போதிமரம்

  





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive