டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ப.ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கான கணினிவழி தேர்வு மற்றும் விரிவாக எழுதும் தேர்வு ஆகஸ்ட் 16 முதல் 21 வரை, தொடர்ந்து செப்டம்பர் 7 முதல் 12 வரை மற்றும் 19-ம்தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்வெழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான ஹால்டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒருமுறை பதிவுதளத்தின் மூலமாக விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இத்தேர்வு, உதவி பொறியாளர், வேளாண் விரிவாக்க அலுவலர், மருந்து ஆய்வாளர், தோட்டக்கலை அலுவலர், தொல்லியல் அலுவலர் ஜூனியர் போட்டோகிராபர் உள்பட 45 விதமான பதவிகளில் 508 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...