2026
ஆம் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்குவதற்காக 17.07.2026 முதல்
03.08.2026 வரை ஆசிரியர்கள் EMIS வாயிலாக விண்ணப்பிக்கத்
தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறைவான அளவிலேயே விண்ணப்பங்கள் பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளதால், விண்ணப்பிப்பதற்கான கால அளவை 06.08.2026 வரை
நீட்டிப்பு செய்யப்படுகிறது. எனவே ஆசிரியர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி
விண்ணப்பங்களை முழுமையாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. பகுதியாக
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள (partially completed) விண்ணப்பங்களின்
எண்ணிக்கை அதிகளவு உள்ளதால் அவற்றினை முழுமையான அளவில்(fully completed)
பதிவேற்றம் செய்யும் பணியினை துரிதப்படுத்துமாறும் அனைத்து வட்டாரக்கல்வி
அலுவலர்கள் மூலம் சார்ந்த ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
👇👇👇👇







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...