மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதாவில் வங்கிகளும் சேவை நிறுவனங்களும் மின்னணு பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதற்கான தடையை நீக்க முன்மொழிந்துள்ளார். இதையடுத்து, ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்டணம் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அரசு புள்ளிவிவரங்களின்படி, மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளின் பங்கு 5% மட்டுமே. ஆனாலும், இவை மொத்த பரிவர்த்தனை மதிப்பில் 65% பங்கைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கிரெடிட் கார்டுகளைப் போல் அல்லாமல், இதில் நிதி மூலதனச் செலவு இல்லாததால், வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு ஒரு குறிப்பிட்ட உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, ரூ.2,000-க்கு உட்பட்ட பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் இல்லை. இதனால் காய்கறி, பால், மளிகைப் பொருட்கள் வாங்குவது மற்றும் ஆட்டோ, டாக்சி கட்டணம் செலுத்துவது போன்ற அன்றாட சிறு செலவுகள் இதனால் பாதிக்கப்படாது. எனவே, 95% பரிவர்த்தனைகள் இந்த கட்டண வரம்பிற்குள் வராது. மேலும், வணிகர்கள் இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவார்களா அல்லது தாங்களே ஏற்றுக்கொள்வார்களா என்பது அவர்களின் விருப்பத்தைச் சார்ந்தது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...